July 1, 2025
  • July 1, 2025
Breaking News
February 9, 2020

சர்வர் சுந்தரத்தில் கவர்ச்சி விருந்து

By 0 824 Views

காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று பல திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

அதில் ஒன்று சந்தானம் மற்றும் வைபவி நடித்த சர்வர் சுந்தரம். இந்த படத்தில் இடம்பெறும் ‘கம கம சமையல்’ என்னும் பாடலில் லிரிக்கல் வீடியோ சில பல வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் உணவுப்பொருட்கள் அந்த வீடியோ முழுவதும் இடம்பெற்று இருந்துச்சு. அந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதோடு பசியைத் தூண்டும் அந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.

அதே மாதிரி இப்பட ஹீரோயின் வைபவி சாண்டில்யா இதற்கு முன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து “இருட்டு அறையில் முரட்டு குத்து”, ஜெய்யின் “கேப்மாரி” ஆகிய படங்களில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார்.

இந்த விஷயம் படத்தின் வியாபாரத்தில் முக்கிய பங்காக ஆகியிருக்கிறது.