October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சீறு பிரஸ்மீட்டில் மாற்று திறனாளி திருமூர்த்தியை பாடவைத்த இமான் வீடியோ
February 2, 2020

சீறு பிரஸ்மீட்டில் மாற்று திறனாளி திருமூர்த்தியை பாடவைத்த இமான் வீடியோ

By 0 785 Views

வேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்க உருவாகி இருக்கும் படம் ‘சீறு’. கோலிவுட்டில் 17 ஆண்டுகளை முடித்துள்ள ஜீவா நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்து விட்டன.

இந்தப் படத்தில் செவ்வந்தியே என்னும் பாடலை ‘நொச்சிப்பட்டி திருமூர்த்தி’ என்பவர் பாடியுள்ளார். பார்வைத் திறனில் மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் மூலம் இணையத்தில் பிரபலமானதைத் தொடர்ந்து அவரது குரல் மற்றும் திறமையை கண்டு வியந்த டி. இமான் திருமூர்த்தியை நிச்சயம் சினிமாவில் பாட வைப்பேன் என்றார்.

சொன்னது போலவே செய்து காட்டிய இமான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திருமூர்த்தியை அறிமுகம் செய்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவரைப் பாடவும் வைத்தார். அது மட்டுமல்லாமல் இன்றைக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு கூட வாய்ப்புகள் எலீதாகக் கிடைத்து விடுகின்றன. ஆனால், மற்றவர்களுக்குக் கிடைப்பது அரிதாகி விட்டது.

எனவே இந்தப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் ராஜகணபதியையும் பாராட்டி அவர் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று அவரையும் பாட வைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் புகழ்பெற்ற பாடகர் சங்கர் மகாதேவனின் மகனையும் இந்தப்படத்தில் பாட வைத்திருக்கிறார் அவர்.

அப்போது நன்றி தெரிவித்த திருமூர்த்தி செவ்வந்தியே பாடலின் சில வரிகளையும் பாடினார். அந்த வீடியோ கீழே…