August 30, 2025
  • August 30, 2025
Breaking News
December 8, 2020

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By 0 757 Views

பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஒருபுறமும் அவரது மகள் வரலட்சுமி இன்னொரு புறமுமாக ட்வீட் செய்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் பாதிப்படையவில்லை எனவும், தொடர்ந்து சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராதிகாவும் வரலட்சுமியும் தெரிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து அவரது உடல் நிலையை ட்வீட் மூலம் தெரிவிப்போம் என்றும் இருவரும் தெரிவித்து இருக்கிறார்கள். சரத்குமார் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.