August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்
October 15, 2018

சினிமாவில் பாலியல் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு – விஷால்

By 0 1057 Views

விஷாலின் 25வது படமாக ‘சண்டக்கோழி 2’ அமைவதும், அதை விஷாலே தயாரித்து அதில் நடிப்பதும், முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இயக்குவதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாகப் பேசினார் விஷால்.

“இந்தப் படத்தைப் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான்.

சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையைத் தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, ‘சண்டக்கோழி 2’ வுக்கும் சிறப்பான இசையைத் தந்துள்ளார். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ‘ஹிட்.’ ஆகியுள்ளது. ‘சண்டக்கோழி 2’ திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும்.

வெளியீட்டுத் தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது..!” என்ற விஷாலிடம் தற்போது இந்தியாவெங்கும் பரபரப்பாகிவரும் ME TOO விவகாரம் பற்றி கேட்டபோது…

Sandakozhi2

Sandakozhi2

“நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். ME TOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்குதான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன்.

பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும். மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரைப் பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.

அதே போல் இதைப் போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களைத் தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல.

பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்..!” என்றார்.

சிறப்பு..!