January 29, 2026
  • January 29, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்பட 8 பேர் மீது வழக்கு
June 17, 2020

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

By 0 607 Views

சில தினங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கில் பிணமாகக் கிடந்தார்.

அவர் மரணத்துக்கு பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்.

படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தள்ளியிருப்பதாக புகார் கூறியிருக்கிறார் அவர்.

மேற்படி நபர்களால் சுஷாந்துக்கு 7 படங்கள் கை நழுவிப் போயினவாம். அந்த உலைச்சலில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது சுதிரின் வாதம்.

நீதி மன்றம் என்ன சொல்கிறது பார்ப்போம்..!