இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட முதல்நிலை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை எடுத்த கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் நேரடித் தமிழ்ப்படம் இது. அந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்கிறார் நம் ஹீரோ ஸ்ரீகாந்த்.
ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது… நல்ல வாய்ப்புதானே..? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான். ஆனால், படத்தில் ஸ்ரீ வருவது பாதிப்படத்தில் மட்டுமே. அத்துடன் இந்தப் படத்தின் தன்மையே வேறு. படத்தின் தலைப்பைத் தாங்கி நிற்பது ஒரு நாய். அதன் பெயர்தான் ராக்கி.
ராக்கி குட்டியாக இருக்கும்போது அதன் சகோதரனையும் சேர்த்து இரண்டு திருடன்கள் கடத்த, அதில் ராக்கி மட்டும் தப்பிக்கிறது. அத்துடன் வழியில் ஒரு விபத்திலும் சிக்க, அதை அஸிஸ்டன்ட் கமிஷனராக இருக்கும் ஸ்ரீகாந்த் எடுத்து சிகிச்சையளித்து போலீஸ் நய்க்குண்டான பயிற்சியெல்லாம் கொடுத்து தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.
இன்னொரு பக்கம், மந்திரியாக இருக்கும் சாயாஜி ஷிண்டேவின் சமூக விரோத செயல்களுக்கு ஸ்ரீகாந்த் சிம்ம சொப்பனமாக இருக்க, அதன் காரணமாக ஸ்ரீகாந்தைப் பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் சாயாஜி. ஒரு கட்டஹ்தில் ஆயுதங்கள் கடத்தும் ஓஏகே சுந்தரை ஸ்ரீகாந்த் பொறிவைத்துப் பிடிக்க, சாயாஜியின் கையாளான சுந்தர், ஸ்ரீகாந்த் டீமிலேயே இருக்கும் போலீஸை வைத்தே தப்பித்து விடுகிறார்.
அவரைப் பிடிக்கப்போகும் இடத்தில் வைத்து ஸ்ரீகாந்தைக் கொல்கிறது சாயாஜி அன்ட் கோ.