January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அடுத்தடுத்த அதிர்ச்சியில் பாலிவுட் – ரிஷி கபூர் மரணம்
April 30, 2020

அடுத்தடுத்த அதிர்ச்சியில் பாலிவுட் – ரிஷி கபூர் மரணம்

By 0 762 Views

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.

நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில், இன்று ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூகவலைத்தளங்களில் தங்களின் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

2018ல் அவருக்கு புற்றுநோயால் கண்டறியப்பட்ட நிலையில், பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று 2019-இல் இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய ரிஷி கபூர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த பிப்ரவரியில் அவர் இரண்டுமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவருக்கு வயது 67.