October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரஜினி கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு
January 28, 2020

ரஜினி கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு

By 0 640 Views

சர்வதேச புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலின் ஹிட் புரொகிராம்காளில் ஒன்றசன ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும்.

இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார்.

சில பல மாதங்களுக்கு முன் உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்குப் பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது.

2 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் பங்கேற்கிறார்.

அவர் கலந்து கொள்ள வந்தபோது எடுதத வீடியோ…