January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விரைவில் சித்தி 2 உங்கள் சன் டிவியில் – ராதிகா சரத்குமார்
July 16, 2020

விரைவில் சித்தி 2 உங்கள் சன் டிவியில் – ராதிகா சரத்குமார்

By 0 745 Views

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இப்போதும் தொடரும் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகளால் பல்வேறு முன்னணி சீரியல்களில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது ‘சித்தி 2’ சீரியலில் நிகழ்ந்துள்ள மாற்றம் தொடர்பாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பது இதுதான்:

“சிக்கல்களுக்கு நடுவிலும் ’சித்தி 2’ படப்பிடிப்பு தொடர்கிறது. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் ‘சித்தி 2’ உங்கள் சன் டிவியில்”

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டுடன் ராதிகா சரத்குமார் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் பொன்வண்ணன் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்கள் இடம்பெறவில்லை. இதனால் யார் எல்லாம் மாற்றப்பட்டுள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும்.