April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு
May 21, 2020

ஜோர்டானில் தவித்த பிரித்விராஜ் குழுவினர் தனி விமானம் மூலம் மீட்பு

By 0 700 Views

பிரபல நடிகர் பிரித்விராஜ் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சொந்த தயாரிப்பில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு சென்றனர். வெளிநாட்டு விமான பயணம் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டனில் உள்ள ‘வாடி ரம்’ என்கிற பாலைவன பகுதியிலேயே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கினர்.

தன் கணவர் நிலையை கண்டு மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், பட குழுவினரை நிலையை நினைத்து கொண்டிருப்பதாக வருத்தப்பட்டார் அவரது மனைவி சுப்ரியா. ஆனாலும் பலன் இல்லை.

பல போராட்டங்களை கடந்து ஜோர்டானில் ஒரு சில நாட்கள் அரசாங்க அனுமதியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாலைவனத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டனர்.

இந்தநிலையில் இந்த படக்குழுவினர் கேரளா திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விமானத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேர் கொண்ட படக்குழு ஜோர்டனிலிருந்து புதுடில்லி வரவுள்ளனர்.

டெல்லியில் இருந்து மற்றொரு விமானம் மூலமாக நாளைக்கு (மே-22) கொச்சியில் வந்து இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரிதிவிராஜ் மனைவி சுப்ரியாவும் அவர் குழந்தை மற்றும் படக்குழுவினர்களின் குடும்பத்தார்களும் நிம்மதியடைந்துள்ளனர்.