July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கிரிக்கெட்டை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ப்ளூ ஸ்டார் படத்தை ரசிக்கலாம் – பிருத்வி பாண்டியராஜன்
January 22, 2024

கிரிக்கெட்டை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ப்ளூ ஸ்டார் படத்தை ரசிக்கலாம் – பிருத்வி பாண்டியராஜன்

By 0 254 Views

நடிகர் பிருத்வி பாண்டியராஜன் இப்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ப்ளூ ஸ்டார் படம் மூலம் மீண்டும் வருகிறார்.

ப்ளூ ஸ்டாரில் தனது இரண்டு காதல்களான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை இணைத்து நடித்துள்ளார்.

ஜனவரி 25, 2024 அன்று வெளியாகும் இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் மற்றும் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் குறித்து பிருத்வி கூறுகையில்,

“கிரிக்கெட்டை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைவரையும் கவரும் ஒரு தனித்துவமான படம் ப்ளூ ஸ்டார் என்று நான் நம்புகிறேன்.

கதாபாத்திரங்களின் வாழ்க்கையை நுணுக்கமாக சொல்வதால் கதையில் பல அடுக்கு உணர்வுகள் உள்ளன.

இதில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் ஜெயக்குமார், தயாரிப்பாளர்கள் கணேஷ் மூர்த்தி மற்றும் லெமன் லீஃப் கிரியேஷன்ஸின் ஜி சௌந்தர்யா மற்றும் பா ரஞ்சித் சார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தை பெரிய திரையில் பார்வையாளர்களுடன் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் ப்ளூ ஸ்டாரின் ஒரு பகுதியாக இருந்ததைப் போலவே அவர்களும் படத்தின் பகுதியாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்.

வாழ்த்துகள் பிருத்வி..!