August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரபுதேவா ரைஸா வில்சன் நடிக்கும் புதிய படம் தொடக்கம்
July 15, 2021

பிரபுதேவா ரைஸா வில்சன் நடிக்கும் புதிய படம் தொடக்கம்

By 0 622 Views

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்தப் படத்திலாவது உருப்படியான கதை சொல்லி பெயரை காப்பாற்றிக் கொள்வாரா சந்தோஷ் பி.ஜெயக்குமார்..?