August 31, 2025
  • August 31, 2025
Breaking News
September 18, 2021

மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது

By 0 787 Views

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” . 

இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது. 

பல தலைமுறகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின்செல்வன்” . 

எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர். 

பலரும் இதை படமாக்க நினைத்து முடியாமல் போனது. ஆனால் அதை முடித்து காட்டிள்ளார் மணிரத்னம். மணிரத்னம் “பொன்னியின்செல்வன்” எடுக்கிறார் என்றதும் , படம் ரிலீஸ்க்கு முன் நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

“இப்படி ஒரு படம் இனிமே அமையாது..அதை எடுக்கவும் முடியாது.. அதற்கு வாய்ப்பே இல்லை.. இதை மணிரத்னம் தான் செய்ய முடிந்தது.. படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம்..”

என்று இதில் நடித்த நடிகர் நடிகைகள் சொல்கிறார்கள்.

இது 2022 வெளியீடு.