January 10, 2025
  • January 10, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • பஞ்சராக்ஷரம் திரைப்பட விமர்சனம்

பஞ்சராக்ஷரம் திரைப்பட விமர்சனம்

By on December 26, 2019 0 941 Views

இந்தக் கரடுமுரடான தலைப்புக்குள் இப்படி ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் இருக்குமென்று படம் பார்க்கும்வரை கூட நினைக்கவில்லை. 

அதுவும் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை முடிச்சை எடுத்துக்கொண்டு அதில் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் பாலாஜி வைரமுத்துவைப் பாராட்டலாம். 

எதேச்சையாகச் சந்தித்து நண்பர்களாகும் ஐவர், ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் வித்தியாச அனுபவங்கள்தான் படம்.  

நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம். அதை மாற்றி நேர்மறை என்ணங்களை ஏற்படுத்திக்கொண்டால் எந்த இக்கட்டிலிருந்தும் வெளிவர முடியும் என்று கருத்தை ஆழமாகச்சொன்ன இயக்குநர் பாலாஜி இந்த எண்ணத்துக்காகவே வெற்றியடைய வேண்டும்.

ஆனால், இப்படி ஒரு வைப்ரேஷனை ஏற்படுத்திவிட்டு ஏன் கடைசியில் அந்த நீலக் குயிலைக்க்காட்டி ஒரு பேரழிவு நிகழும் என்று எதிர்மறையாக முடிக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அது அடுத்த பாகத்துக்கான ஆயத்தமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதிலாவது பாஸிட்டாக முடித்தால் மட்டுமே அவர் முயற்சி வீணாகாது.

பஞ்சராக்ஷரம் – பாஸிட்டிவ் அப்ரோச்..!