July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அமேசான் பிரைமில் படையப்பா – ரஜினியை மீறி வெளியிட்டது யார்?
May 2, 2020

அமேசான் பிரைமில் படையப்பா – ரஜினியை மீறி வெளியிட்டது யார்?

By 0 1030 Views

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளி வந்த படம் ‘படையப்பா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் . இந்தப்படம் ப ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆகி விட்டது.

இப்படத்தினை நடிகர் ரஜினியே தனது ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில், ஹாட் டாபிக்-கை கிளப்பி வரும் ஓடிடி பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-ல் படையப்பா படம் வெளியானது.

இதைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளைத் தெரிவித்த வண்ணமிருந்தனர்.

அவற்றைக் கேள்விப்பட்ட ரஜினி அதிர்ச்சியடைந்து, “அந்த படத்தை எந்த ஆன்லைன் பிளாட்ஃபார்மிலும் ரிலீஸ் செய்ய யாருக்குமே ரைட்ஸ் கொடுக்கவில்லையே..?” என்று  தெரிவித்திருக்கிறார்.

உடனே சட்ட ரீதியாக  ஒரு கடிதம் அமேசானுக்கு அனுப்பப் பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் இருந்து ‘படையப்பா’ நீக்கப்பட்டதாக தகவல் வெளி வந்திருக்கிறது.

அத்து மீறி படத்தை வெளியிட்டது யார்?