கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு அறிவிக்கப்பட்ட தளர்வு களில் இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை.
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஓடிடி-யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல. தியேட்டர்களை திறக்க சிறிது காலம் ஆவதால் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதை விட பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்…’’ என்றார்.
சினிமா ரசிகர்கள் காக்க காக்க..!
Related