January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டிவி நடிகை நிலானி காதலர் தற்கொலை – போலீஸ் புகார் எதிரொலி
September 17, 2018

டிவி நடிகை நிலானி காதலர் தற்கொலை – போலீஸ் புகார் எதிரொலி

By 0 1209 Views

சின்னத்திரை நடிகை நிலானிக்கும், சின்னத்திரையில் உதவி இயக்குநராக இருக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

இருவருக்கும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ள நிலையில் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக நிலானி நடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் பேச முற்பட இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்ற நடிகை நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நிலானியின் காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

நிலானி பற்ரிய ஒரு நினைவூட்டல். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீசுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவரேதான்.