September 2, 2025
  • September 2, 2025
G Tamil News
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
    • சமுதாயம்
    • காவல் / ராணுவம்
    • மருத்துவம்
    • பெண்கள்
    • விளையாட்டு
  • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • திரைப்படம்
    • செய்திகள்
    • புகைப்படங்கள்
    • காணொளி
    • நிகழ்வுகள்
    • விமர்சனம்
  • கல்வி
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • பல்சுவை
    • உணவு
    • நாகரிகம்
    • சுற்றுலா
    • அங்காடி
  • சிறப்புக் கட்டுரை
Browse All Sections
  • uncategorized
  • %e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • %e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88
  • %e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d
    • காணொளி
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • விமர்சனம்
  • %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88
    • அங்காடி
    • உணவு
    • சுற்றுலா
    • நாகரிகம்
  • %e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d
    • காவல் / ராணுவம்
    • சமுதாயம்
    • பெண்கள்
    • மருத்துவம்
    • விளையாட்டு
Breaking News
Facebook Twitter Google+ Instagram Youtube
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
    • சமுதாயம்
    • காவல் / ராணுவம்
    • மருத்துவம்
    • பெண்கள்
    • விளையாட்டு
  • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • திரைப்படம்
    • செய்திகள்
    • புகைப்படங்கள்
    • காணொளி
    • நிகழ்வுகள்
    • விமர்சனம்
  • கல்வி
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • பல்சுவை
    • உணவு
    • நாகரிகம்
    • சுற்றுலா
    • அங்காடி
  • சிறப்புக் கட்டுரை
G Tamil News
  • Home
  • திரைப்படம்
  • குழந்தைகளை மகிழ்விக்கும் பறக்கும் கருநாக பாம்பு
May 5, 2019

குழந்தைகளை மகிழ்விக்கும் பறக்கும் கருநாக பாம்பு

By G Tamil News 0 770 Views
ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் ‘நீயா2’. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம் தான் பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் நிறைந்திருக்கும். அந்த பாம்பை பற்றியும்,  கிராபிக்ஸ் பற்றியும்  கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியது:

தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்கு சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரை சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்த பாம்பு இருக்கும்.

 
படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு செய்தோம். கருநாகத்தின் குணாதிசயங்களை பயிற்சியாளரை கொண்டு படம் பிடித்தோம். பயிற்சியாளர் கை நீட்டியதும் இந்த கருநாகம் 3 அடி உயரத்திற்கு ஏறியது. மேலும், இப்படத்தில் கருநாகத்தை வைப்பதற்கு காரணம் அது ஞாபக சக்தி உடையது.
 
நாய்க்கு தன் இந்த குணம் இருக்கும் தன்னுடைய முதலாளி அடையாளம் கண்டு பணியும். அதைப்போல் இந்த கருநாகமும் பயிற்சியாளரை கட்டளைக்கு பணிந்தது நேரடியாக கண்டோம். படத்திலும் அது போன்ற ஒரு காட்சி வருவதால் கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம். பாம்பு வாய் திறக்கும் போது வாயின் உடற்கூறு, பற்கள், அதனுடைய நாக்கை 4 இஞ்ச் அளவிற்கு வெளியே நீட்டும் என்பது போன்ற விஷயங்களைக் காட்டி இருக்கிறோம்.
 
கருநாகத்தின் முகம் பெரியதாக இருக்கும் என்பதால் ஒரு பொருளை உடைக்கும் அளவிற்கு திறன் கொண்டது. மேலும், மரத்தை சுற்றி கொள்வதுபோல், ஒரு மனிதனை சுற்றிக் கொள்ளும். இதுபோன்ற விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு படத்தில் உபயோகப்படுத்தினோம்.

கதாபாத்திரத்திற்கு தொடர்பு ஏற்படுத்துவதற்காக போலியான பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினோம் பிறகு அதைக் கொண்டு கிராபிக்ஸ் செய்தோம். அனிமேஷன்-க்கு மட்டும் 1 வருடம் 2 மாத காலம் ஆயிற்று. தயாரிப்பாளர் அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் தான் இந்த அளவு தரமானதாக கிராஃபிக்ஸ் செய்ய முடிந்தது. 

இயக்குநர் நிஜ பாம்பு போலவே இருக்க வேண்டும் என்று கூறியதால், சில காட்சிகளை கிரீன் மேட் கொண்டு எடுத்தோம்.

பாம்பைத் தவிர அணில், கழுகு, நாய், போன்றவற்றையும் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் இயக்குநரும், தயாரிப்பாளரும் முழு ஆதரவு கொடுத்தார்கள்.  இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.

இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது :

பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம் ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும்.

மேலும், ‘நீயா’ படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

அதேபோல், ‘நீயா’ படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. ‘பெயர்’, ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன்’ பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது.

இவ்வாறு இயக்குநர் எல்.சுரேஷ் கூறினார்.

ஜம்போ சினிமாஸ்-ன் ஏ. ஸ்ரீதர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார்.மே10 வெளியீடு.

 

Share this:

  • WhatsApp
  • Twitter
  • Facebook
  • LinkedIn

Related

  செய்திகள்திரைப்படம்
Next Post

2 நாளில் 3 மில்லியன் தொடும் Mr லோக்கல் டிரைலர்

May 5, 2019 0
Related Posts
September 1, 2025

லோக்கா – சாப்டர் 1 சந்திரா திரைப்பட விமர்சனம்

September 1, 2025

மிராய், என்றால் ‘எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம்..! – தேஜா சஜ்ஜா.

August 31, 2025

பாம் இயக்குனர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பன்..! – ரா பார்த்திபன்

  • Facebook Facebook
  • Twitter Twitter
  • Google+ Google+
  • Instagram Instagram
  • Youtube Youtube

NewsLetter

Get the best viral stories straight into your inbox!

Don't worry we don't spam

© 2018 G Tamil News. All rights reserved.

  • Designed & Developed By MML Software Solutions