October 19, 2025
  • October 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லாஸ் வேகாஸில் பிறந்த நயன்தாராவின் காதல் புத்தாண்டு
January 1, 2019

லாஸ் வேகாஸில் பிறந்த நயன்தாராவின் காதல் புத்தாண்டு

By 0 1949 Views

ஒரு சிலருக்கு இன்று மெரீனா பீச்சில் புத்தாண்டு பிறந்தது. மேலும் சிலருக்கு மால்களில், பார்ட்டிகளில், மருத்துவமனைகளில்… வீட்டில் என்று அவரவர் சூழ்நிலைக்கேற்க புத்தாண்டு பிரந்து கடந்தது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொஞ்சம் ஸ்பெஷல்தானே..? அதனால், அவருக்கான புத்தாண்டு லாச் வேகாசில் பிறந்திருக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் புத்தாண்டுகளை இப்படி எந்தெந்த நாடுகளில் வைத்துக் கொண்டாடலாம் என்றுஅ முடிவு செய்து கிளம்புவார்கள்.

அப்படி நயன்தாரா இந்த வருடம் தேர்ந்தெடுத்த நாடுதான் லாஸ் வேகாஸ். உடன் சென்றவர் அவரது மச்சக்கார காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன். கடந்த இரு தினங்களாகவே அந்தப் பயணப் படங்களை நயன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்தப் படங்கள் இங்கே. “இதுகளுக்கு இதே வேலையாப் போச்சுப்பா…” என்று பொரிந்து தள்ளுபவர்கள் அப்படியே இந்தப்படங்களைக் கடந்து விடுங்கள். “ஹூம்…” என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு முறையோ, இரு முறையோ படங்களை ஓட்டி ஓட்டி இன்னும் பெரிய மூச்சுகளாக விடுங்கள்..!

அது உங்கள் சௌகரியம்..!

(1)

Image 1 of 3