November 22, 2024
  • November 22, 2024
Breaking News
April 25, 2018

காதலைக் கற்றுக் கொடுத்ததே கார்த்திக்தான்- சூர்யா

By 0 1677 Views
Mrs. Brindha Sivakumar

Mr. Chandramouli

எப்போது முடியும் என்று எதிர்பார்த்திருந்த திரைப்பட வேலை நிறுத்தம் முடிந்து, முதல் நிகழ்வாக அமைந்தது ‘பாஃப்டா மீடியா வொர்க்ஸ்’ சார்பில் தனஞ்ஜெயன் மற்றும் ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ்’ தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீடு.

அதனாலோ என்னவோ ஒட்டுமொத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியும் அங்கு குழுமினாற்போல எங்கு தொரும்பியனாலும் வி.ஐ.பிக்களின் தலியகள் தென்பட்டு சமீபத்தில் நடந்த பிரமாண்ட விழாவாக அமைந்தது அந்நிகழ்வு. அத்ற்கு முக்கியக் காரணம் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

சாம் சிஎஸ் இசைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன் பெற்றுக் கொண்டனர்.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் ஹைலைட், முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, ‘திரு’ இயக்கியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “இந்தப் படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார்தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்தக் கதையை எடுக்க முடியும் என்றேன். கார்த்திக் சாரை அணுக உதவியாக இருந்த இயக்குனர் கண்ணன் சாருக்கு நன்றி.

Regina Casentra

Mr. Chandramouli

தமிழ் சினிமாவில் கார்த்திக் சார், ஷூட்டிங்குக்கு லேட்டாக வருவார், அவரை வைத்து எப்படிப் படத்தை எடுப்பீர்கள் என்று நிறைய பேர் கேட்டார்கள். ஆனால், வேகமாக படத்தை முடிக்க அவர் மிக முக்கிய காரணம். நான் கேட்டுக் கொண்டதால் வரல‌ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அது ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரம் என்பதால் ட்ரைலரில் அவரைக் காட்ட முடியவில்லை. என் குரு இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் நடித்தது என் பாக்கியம். மே 25ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்..!” என்றார்.

படத்தின் கூடுதல் ஈர்ப்பாக சிவகுமார் மகள் பிருந்தாவை இந்த படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் தனஞ்செயன். தங்கைக்காக வந்திருந்த சூர்யா பேசியதிலிருந்து…

“கார்த்திக் சார் படங்களைப் பார்த்து தான் காதல் என்றால் என்னவென்று கற்றுக் கொண்டோம். என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கார்த்திக் சாரோடு இணைந்து நடித்தது என் பாக்கியம். அவரின் எனர்ஜி எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளும். கௌதம் கார்த்திக்குக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது..!”

நாயகன் கௌதம் கார்த்திக் பேசியதிலிருந்து…

“அப்பாவுக்கும், சதிஷுக்கும் இந்தப் படத்தில் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. இதில் ஆக்‌ஷன் மிக அதிகம், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. சந்திரமௌலி அனுபவம் காலம் கடந்து என் மனதுக்குள் இருக்கும். அப்பா இதுபோல தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்..!”

Karthik, Gautham Karthik

Mr. Chandramouli

கார்த்திக் பேசும்போது தன் மீதான குற்றச்சாட்டு பற்றியும் பதில் சொன்னார். அதிலிருந்து…

“150 படம் பண்ணின பிறகும் என்னைப் பற்றி சில பேர் ஏன் அப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை. 1981ல் நான் நடிக்க வந்தேன், அதில் இந்தப் படம் மிக முக்கியமான படம். கௌதம்தான் “ஒரு கதை இருக்கு கேளுங்க…” என்று சொன்னான். கதை கேட்ட பிறகு ரொம்ப பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமை. சிவகுமார் அவர்களை ‘சித்தப்பா’ என்றுதான் கூப்பிடுவேன். அவர்கள் குடும்பத்தில் சிவகுமார், சூர்யா, கார்த்தி எல்லோருடனும் நடித்து விட்டேன். இந்தப் படத்தில் சர்ப்ரைஸாக அவரது மகள் பிருந்தா பாடியிருக்கிறார். இயக்குனர் மகேந்திரன் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசையாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி..!”

விழாவில் பாடகி பிருந்தா சிவகுமார், இயக்குனர்கள் கண்ணன், சுசீந்திரன், விஜய், அருண் வைத்யநாதன், சசி, ராதாமோகன், கௌரவ், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பெரோஸ், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, ரகுநாதன், பி.எல். தேனப்பன், மதன், நடிகர் விஜய் ஆண்டனி, ஷாந்தனு, ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், மகேந்திரன், அகத்தியன், ரிச்சர்ட் எம் நாதன் என ஒரு பிரமாண்ட கலைஞர்கள் கூட்டமே கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

ஆக, அசத்திட்டார் மிஸ்டர் சந்திரமௌலி..!

Mr. Chadramouli Audio Launch

Mr. Chadramouli Audio