October 10, 2024
  • October 10, 2024
Breaking News
April 26, 2018

அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி

By 0 1142 Views

இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோவா என்றுதானே ஆச்சரியமாக இருக்கிறது..? ஆனால், அதுதான் உண்மை. வெளியிலிருநு பார்ப்பதற்கு பழக முடியாதவர் போலிருக்கும் அரவிந்த்சாமி, நிஜத்தில் வெளிப்படையானவர்- நிறைய விட்டுக் கொடுப்பவர். இதை அவர் சொல்லவில்லை. அவருடன் நடித்த நடிகர்கள் சொல்லிப் பூரித்தார்கள்.

‘ஹர்ஷினி மூவீஸ்’ தயாரித்திருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் அரவிந்த்சாமிதான் ஹீரோ. அவரது ஜோடியாக அமலா பால் நடிக்க சித்திக் இயக்கி இருக்கிறார். இதன் வினியோக உரிமையை ‘பரதன் பிலிம்ஸ்’ கைப்பற்றி வரும் மே 11ம்தேதி வெளியிடுகிறார்கள். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சித்ரா லட்சுமணனும், நடிகரும் படத்தின் வசனகர்த்தாவுமான ஒன்று போலவே ஒரு உண்மையப் பேசினார்கள்.

அரவிந்த்சாமி இந்தபடத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளும்போது அட்வான்ஸ் பெறவில்லையாம். அத்துடன் படத்துக்கான நெருக்கடி வந்தபோதெல்லாம் உதவி நடித்துக் கொடுத்து படத்தை முடிக்க உதவினார் என்றார்கள். அதேபோல் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை வாங்கவில்லையென்றால் இந்தப் படத்தை வெளியிட வாய்பில்லை என்றார்கள்.

அதன்பின் பேச வந்த அரவிந்த்சாமி இந்தப் படத்தில் சித்திக் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி சொன்னதுடன் “படம் பல தடைகளைத் தாண்டி வெளியாக இருக்கிறது. படத்தில் வசனத்தை ரமேஷ் கண்ணா  அருமையாக எழுதியுள்ளார். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்திருக்கிறார். சூரி,ரோபோசங்கர்,ரமேஷ் கண்ணா அட்டகாசமான நகைச்சுவை காட்சிகளைக் கொடுத்துளள்னர்.நைனிகா ,ராகவன் இரண்டு குழந்தைகளுமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.அம்ரேஷ் இசை அருமையாக இருக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் விஜயன் அவர்களுடைய 500 வது படம் இது. அவருக்கு என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்றார்.

“இப்படி பணத்தை விட்டுக் கொடுத்து நடித்தால் பல படங்களில் ஏமாற்றிவிடுவார்களே..?” என்று கேட்டபோது “யார் நிஜமான கஷ்டத்தில் இருக்கிறார்கள். யார் ஏமாற்ற நினைக்கீறார்கள் என்று தெரிந்து விடும். அதைக் கவனித்துதான் உதவிகள் செய்கிறேன்..!” என்றார்.

பஜார்ல இப்படித்தான் உஜாரா இருக்கணும் சாமி சார்..!