October 29, 2025
  • October 29, 2025
Breaking News
October 29, 2025

மெசஞ்ஜர் திரைப்பட விமர்சனம்

By 0 19 Views

காலத்துக்கும் அலுக்காதவை காதல் கதைகள்தான். அவற்றுள் பல வகைக் காதல்கள் இதுவரை சினிமாவில் புழங்கி வந்திருக்கிறது. 

இது வேறு ஒரு தினுசான கதை. இறந்துபோன பெண் ஒருத்தி காதலிக்கும் 3.0 கதை. மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும் இந்தக் கதையை மக்கள் கடித்துக்கொள்ள வைக்கும் கிளைமாக்ஸ் உடன் தந்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.

தான் முதல் காதல் தோற்றுப்போன விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளப் போகும்போது நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் போன் பேஸ்புக் மெசஞ்ஜரில் ஒரு மெசேஜ் வருகிறது. அவரை தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லும் அந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடையும் அவர், அதற்கு பதில் சொல்லப்போக, இறந்து போன நாயகி பாத்திமா நஹும்தான் அவருக்கு செய்தி அனுப்புவதாகத் தெரிகிறது.

போலீசில் விசாரித்துப் பார்த்தால் பாத்திமா இறந்தது உண்மை எனத் தெரிய தொடர்ந்து மெசஞ்ஜரிலேயே அவர்கள் காதல் தொடர, முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

ஶ்ரீராம் கார்த்திக் கின் அப்பாவியான முகம் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் சுமாராகத் தெரியும் பாத்திமா முகம் போகப் போகப் பழக்கமாகி விடுகிறது.

அவரை விட கொஞ்சமே வரும் மனிஷா ஶ்ரீ பரவாயில்லை..

இருவரை விட பாத்திமாவின் தோழியாக வரும் வைஷாலி ரவிச்சந்திரன் கவர்கிறார். 

ஆனால், தோழியின் இடத்தில் நின்று ஶ்ரீராமுடன் சல்லாபிக்க நினைப்பதை ரசிக்க முடியவில்லை.

அதேபோல் ஶ்ரீராம் கார்த்திக்கின் அம்மாவாக வருபவர் பேசும் வசனங்கள் நாகரிகமாக இல்லை.

பாத்திமாவின் தந்தையாக வரும் ஜீவா ரவி பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

எதையோ கண்டுபிடித்துவிடுவார் என்று நாம் நம்பும் இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டன் அங்கங்கே காமெடி பண்ணுவதோடு சரி..!

பாலகணேசன் ஆரின் ஒளிப்பதிவு இதமாக இருக்கிறது. அபுபக்கர் இசையும் ஓகே.

கிளைமாக்ஸை யோசித்து விட்டு அதற்கு ஒரு கதையைப் பின்னி இருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ரமேஷ் இளங்காமணி.

மெசஞ்ஜர் – போறபோக்கில ஒரு காதல்..!