December 13, 2025
  • December 13, 2025
Breaking News
March 25, 2020

மஞ்சிமாவை குந்தாணி ஆக்கிய ரசிகர்கள்

By 0 1016 Views

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21நாட்கள் ஊரடங்கி வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள்.

இதற்காக பல நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளங்களில் எல்லா மக்களையும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

அதே வழியில் நடிகை மஞ்சிமா ” 21 நாட்களுக்கு மட்டும் உங்களை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருங்கள். அது தான் உங்களுக்கு பாதுகாப்பு…” என்று ஒரு டிவிட் போட, அதற்கு ரசிகர் ஒருவர், “அடியேய் குந்தாணி நீயா எங்களுக்கு சோறு போடுவ..?” என்று பதிலளிக்க கோபத்தின் உச்சத்துக்கு சென்ற மஞ்சிமா மோகன் “இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை என்று இன்னொரு ட்வீட் போட அதற்கு பொங்கி எழுந்த இன்னொரு ரசிகர் “எங்களை என்னனு நெனச்சுக்குறீங்க எங்களுக்கு லோன் இஎம்ஐ கட்ட வேண்டாமா நாங்க வெளியே வருவது ஆயிரத்தெட்டு காரணம் இருக்கு எங்களுக்கு அவ்வளவு வேலை இருக்கு” என்று ஒரு ட்வீட் போட பொங்கினார் மஞ்சிமா.

அதற்கு பதில் அளித்த மஞ்சிமா, “நாங்க ஆக்டர், பணக்காரர்கள் அதனால எங்களுக்கு அதெல்லாம் இல்ல நினைக்கிறீங்களா… எங்களுக்கு இதெல்லாம் இருக்கு ஆனா உங்க Safetyக்காக நான் சொல்றேன், கேக்குறது, கேட்காம இருக்கிறது உங்களோட இஷ்டம்” என்று வெளியேறினார்.

கௌதம் மேனன் இயக்கி சிம்பு நடிப்பில் வெளியான ” அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.