October 17, 2025
  • October 17, 2025
Breaking News
March 18, 2020

தனுஷுக்காக தமிழுக்கு வரும் மலையாள எழுத்தாளர்கள்

By 0 684 Views

இந்திய சினிமாவில் தமிழில் மட்டும்தான் இயக்குநர்களே தன் படக் கதையையும் எழுதும் கூத்து நடந்து வருகிறது – அல்லது காப்பியடித்த கதையை வைத்து இயக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆனால், கதாசிரியருமாக இருந்த பாரதிராஜா போன்ற ஒரு சிலர் மட்டும்தான் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படம் இயக்கி சரித்திரம் படைத்தார்கள்.

கொஞ்ச காலம் முன்பு சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷணன், ஜெயமோகன் போன்றோர் வசனம் எழுதும் அளவுக்கு சினிமாவில் அறியப்பட்டார்கள். வெகு சமீபத்தில் ‘அசுரன்’ படம் பூமணியில் ‘வெக்கை’ நாவலில் இருந்து பெறப்பட்டு பெரு வெற்றியடைய, அதைத் தொடர்ந்து இலக்கியப் படைப்புகளின் மீது இயக்குநர்களின் கவனம் பதிய ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், இந்தி, மலையாள, தெலுங்குப் படங்களில் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு அவர்களின் படைப்புகள் பெரிய வெற்றியையும் பெற்று வந்திருக்கின்றன.

இப்போது சத்யஜோதி பிலிம்ஸுக்காக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இன்னும் பெயரிடப்படாத ‘டி43’ படத்தில் மலையாளப் படவுலகிலிருந்து ஷர்பு, சுகாஸ் என்ற இரு இளைய எழுத்தாளர்கள் தமிழுக்கு வரவிருக்கிறார்கள். மலையாளத்தில் கவனிக்கப்பட்டு வெற்றி பெற்ற ‘வரதன்’, ‘வைரஸ்’ படங்களை எழுதியவர்கள்தான் இவர்கள்தான்.

இவர்களைத் தமிழுக்கு அழைத்து வந்ததில் கார்த்திக் நரேனுக்கு வாழ்த்துகள் சொல்லவேண்டும். அதே சமயத்தில் தமிழில் யாரும் அப்படி எழுத்தாளர்களே அவரது கவனத்தில் வரவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனாலும், அவரது முயற்சிக்கு வந்தனம்..!