June 30, 2025
  • June 30, 2025
Breaking News
  • Home
  • Director Karthik naren

Tag Archives

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம்

by on November 23, 2024 0

படத்தின் தலைப்பு கதையை சொல்லி விடுகிறது. அதர்வா முரளி, ரஹ்மான், துஷ்யந்த் – இந்த மூன்று பேரின் தேடல்கள்தான் கதை. சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஏக்ப்பட்ட பட நிறுவனங்களின படிகள் ஏறி இறங்குகிறார் நாயகன் அதர்வா. ஆனால் வாய்ப்பு கிடைக்காத ஆற்றாமையில் போதை வஸ்துகளை நாடுகிறார். ஒரு ஸ்கூல் வாத்தியாரான ரகுமான் தன் மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரிடம் புகார் தருகிறார். (சரத்குமாரின் தேடல் வேறு) இச்சூழலில் […]

Read More

நிறங்கள் மூன்று படத்தை எந்த ஜேனரிலும் அடைக்க முடியாது – அதர்வா முரளி

by on November 19, 2024 0

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’. ஐங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட நடிகர் அதர்வா படம் குறித்து பேசுகையில், “கார்த்திக்கின் ‘துருவங்கள் பதினாறு’ படம் பார்த்ததில் இருந்தே அவருடன் […]

Read More

தனுஷுக்காக தமிழுக்கு வரும் மலையாள எழுத்தாளர்கள்

by on March 18, 2020 0

இந்திய சினிமாவில் தமிழில் மட்டும்தான் இயக்குநர்களே தன் படக் கதையையும் எழுதும் கூத்து நடந்து வருகிறது – அல்லது காப்பியடித்த கதையை வைத்து இயக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆனால், கதாசிரியருமாக இருந்த பாரதிராஜா போன்ற ஒரு சிலர் மட்டும்தான் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படம் இயக்கி சரித்திரம் படைத்தார்கள். கொஞ்ச காலம் முன்பு சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷணன், ஜெயமோகன் போன்றோர் வசனம் எழுதும் அளவுக்கு சினிமாவில் அறியப்பட்டார்கள். வெகு சமீபத்தில் ‘அசுரன்’ படம் பூமணியில் ‘வெக்கை’ […]

Read More

மாஃபியா திரைப்பட விமர்சனம்

by on February 23, 2020 0

ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது (வெளியாகும்) படமாக ஆனதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் வழக்கமான முறையில் இல்லாமல் முன்பின்னான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக வரும் அருண்விஜய்யின் மிடுக்கும், அவருக்கான கெட் அப்பும் அபாரமாக இருக்கிறது. அவரும் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாத்திரத்தை உள்வாங்கி நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். அவர் மேற்கொண்ட பணியில் தொடர்ந்து பின்னடைவு […]

Read More

ப்ரியா பவானி சங்கரின் லக்கி சார்ம் யார் அருண்விஜய் வெளியிட்ட சீக்ரட்

by on February 18, 2020 0

துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் ‘மாஃபியா – பாகம் 1’ படம்தான் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. லைக்கா புரடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெய்லர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது.  அருண் விஜய்யின்  25 வருட வெற்றிகரமான  சினிமா பயணத்தை பாராட்டி  வகையில் […]

Read More

மாபியா கொரில்லா முறையில் படமானது – கார்த்திக் நரேன்

by on February 16, 2020 0

ஆரம்பமே அதிரடியாக ‘துருவங்கள் 16’ இயக்கி கவனிக்கப்படும் இயக்குநர்கள் வரிசையில் இணைந்த கார்த்திக் நரேன் அடுத்து ‘நரகாசூரன்’ இயக்கினார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்ட அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் அதனைத் தொடர்ந்து லைக்கா புரடக்‌ஷன்ஸுக்காக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். இதன் டீஸரும், தொடர்ந்து வந்த பாடலும் அசத்தலாக அமைந்தன. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, […]

Read More