நடிக்க ஆசையில்லாத இயக்குநர்களை ஹாலிவுட்டில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. நம்மூரைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்களும் நடிக்கும் ஆவலில்தான் இருக்கிறார்கள். ஓடுகிற வரை இயக்கம்… அதுக்குப்பிறகு நடிப்பு என்று செட்டில் ஆகி விடுகிறார்கள்.
கோலிவுட்டில் நான்கு படங்கள் இயக்கிய ‘மகிழ் திருமேனி’க்கு இப்போது நடிப்பு திசை ஆரம்பித்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனான இந்தி இயக்குநர் ‘அனுராக் காஷ்யப்’புக்கு மகிழ் டப்பிங் பேசியிருந்தது அந்தப் பாத்திரத்தை மேம்படுத்தியது.
வில்லனுக்கு டப்பிங் என்பது தாண்டி இப்போது வில்லனாகவே ஆகிறார் மகிழ் திருமேனி.
எஸ்.பி.ஜனநாதனிடம் சினிமா பயின்ற ‘வெங்கட கிருஷ்ண ரோகாந்த்’ விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்துக்கு ஒரு நாள் முன்புதான் தலைப்பை அறிவித்தார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அருமையான தலைப்பைக் கொண்டிருக்கும் அந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லனாகிறார் மகிழ் திருமேனி.
இயக்குநராக ஜெயித்தவர் நடிகராக வெல்லவும் வாழ்த்தலாம்..!