September 16, 2026
  • September 16, 2026
Breaking News
November 2, 2019

செந்திலிடம் பல லட்சம் ஏமாற்றிய பலே மேனேஜர் கைது

By 0 845 Views

யாரிடம் பற்று, பசை அதிகமாக இருக்கிறதோ அவர்களை ஒரு கூட்டம் கண்காணித்து ஏமாற்ற நேரம் பார்த்துக்கொண்டே இருக்கும்.

அதிலும் பெரும்பாலும் சிக்குபவர்கள் அதிகம் விவரம் தெரியாத முன்னாணி நகைச்சுவை நடிகர்கள்தான். வடிவேலு இப்படி பலரிடம் ஏமாந்திருக்கிறார்.

அப்படி இப்போது சிக்கியிருப்பவர் நகைச்சுவை நடிகர் செந்தில். அவரிடம் தன் கைவரிசையைக் காட்டி அவரிடம் பல லட்சம் ஏமாற்றியிருக்கிறார் முன்னாள் புரடக்‌ஷன் மேனேஜர் ஒருவர்.

செந்திலிடம் இருந்த பழக்கத்தில் சென்னை பாஸ்கர் காலனியில் இருந்த அவருக்குச் சொந்தமான பத்து படுக்கையறை கொண்ட கட்டடத்தை மாதம் ஒரு லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார் அந்த முன்னாள் மேனேஜர் சகாயராஜ் என்பவர்.

இது நடந்தது 2013ல். ஆரம்பத்தில் சரியாக வாடகை கொடுத்து வரவே அங்கே என்ன நடக்கிறதென்று செந்திலும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கடந்த 6 மாதங்களாக அவர் வாடகையைத் தரவில்லையாம்.

எனவே சந்தேகம் வந்து செந்தில் நேரிலேயே அங்கு சென்று பார்த்தபோது அந்தக் கட்டடத்தை தன் சொந்த கட்டடமாக சொல்லி அதை மேல் வாடகைக்கும், லீஸுக்குமாக ஏழு பேரிடம் அக்ரிமென்ட் போட்டிருந்தாராம் சகாயராஜ்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில் புகார் கொடுத்ததில் தலைமறைவான சகாயராஜைத் தேடி வந்த போலீஸார் நேற்று அவரைக் கைது செய்தனராம்.

இதுக்குதான் சரியா ஒருத்தரைப் பத்தித் தெரியாம சகாயம் காட்டக் கூடாதுன்றது..!