September 15, 2025
  • September 15, 2025
Breaking News
November 6, 2019

சிம்பு வழிக்கு வந்தார் மீண்டும் தொடங்கிய மாநாடு

By 0 657 Views

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு படம் அறிவிக்கப் பட்டபோதே சுரேஷ் காமாட்சியை விவரம் தெரிந்தவர்கள் எச்சரித்தார்கள்.

ஆனால், அதை அசட்டை செய்து அவரும் பெரும்பணத்தை இறக்கினார். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே சிம்பு தன் டகால்டி வேலைகளைக் காட்ட பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுரேஷ் காமாட்சி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து இனி மாநாடு இல்லை என்று அறிவித்தார்.

பதிலுக்கு சிம்பு தரப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை 125 கோடியில் தயாரிக்க இருப்பதாக அறிவித்து சுரேஷ் காமாட்சியின் மேலிருந்த வெறுப்பைக் கொட்டினார்கள்.

இப்போது இரண்டும் பொய்யாகிப் போய் மீண்டும் சிம்பு நடிக்க… சுரேஷ் காமாட்சி தயாரிக்க மாநாடு ஆரம்பிக்கப் படுகிறது.

சுரேஷ் காமாட்சியிடம் கேட்டால், “வேறு வழியில்லை. நிறைய இன்வெஸ்ட் செய்து விட்டேன். அவரும் நடிப்பதாக அக்ரிமெண்ட்டில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்…” என்கிறார்.

நல்லது நடந்தா நல்லதுதான். ஆனா திரும்பவும் மொதலிலேர்ந்து ஆரம்பிக்காம இருந்தா சரி…