October 16, 2025
  • October 16, 2025
Breaking News
March 3, 2022

லெஜன்ட் அண்ணாச்சி பட முதல்பார்வை நாளை காலையில்…

By 0 556 Views

லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும்  பெயரிடப்படாத இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்குவதுடன் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிச்சு வருவதும் தெரிந்த செய்திகள்.

அவருடன் நடிகர்கள் பிரபு, மறைந்த நடிகர் விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது ஆகப் பெரிய விஷயம்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

அறிவியலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது என்றும் இப் படத்தின் ஷூட்டிங் சென்னை, மணாலி உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று முடிந்த செய்தி வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.

தற்போது படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில். இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை காலை 9.55 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படம் வந்தால்தான் தெரியும் அண்ணாச்சி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியா இல்லை பவர் ஸ்டாருக்கு போட்டியா என்று.