December 3, 2024
  • December 3, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • லேசர் தொழில்நுட்பத்தால் பழுதுபட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதில் அப்போலோ மருத்துவமனை சாதனை
June 30, 2023

லேசர் தொழில்நுட்பத்தால் பழுதுபட்ட பேஸ் மேக்கரை அகற்றுவதில் அப்போலோ மருத்துவமனை சாதனை

By 0 317 Views

அப்போலோ மருத்துவமனை முதன் முறையாக இண்டர்வென்ஷனல் முறையில் லேசர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேஸ் மேக்கரால் பாதிக்கப்பட்ட 72 வயது நோயாளிக்கு சிகிச்சை அளித்திருக்கிறது!

சென்னை, 30 ஜூன் 2023 பேஸ் மேக்கரால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நோயாளிகளை காக்கவும், பேஸ் மேக்கர் சிகிச்சைக்கு பிந்தைய இருதய நல சிகிச்சையை மேம்படுத்தும் வகையிலும் பேஸ் மேக்கரில் பாதிக்கப்பட்ட பாகங்களை நோயாளியின் இதயத்திலிருந்து விரைவாக அகற்றுவதற்காகவும் அப்போலோ மருத்துவமனை ஒரு புதுமையான எக்ஸைமர் (Excimer laser technology) முறையிலான லேசர் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

அப்போலோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் [Dr. A M Karthigesan, எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட் மருத்துவர் ஏ.எம்.கார்த்திகேசன் Interventional Cardiologist and Electrophysiologist, Apollo Hospitals], அண்மையில் 72 வயதான ஆண் நோயாளி ஒருவருக்கு இந்த அதிநவீன சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பாகங்களை வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ் மேக்கர் பொருத்திக் கொண்ட நோயாளி ஒருவர், இதயத்தில் தீவிரமான பாக்கெட் இன்ஃபெக்ஷன் [pocket infection) பாதிப்புடன் பேஸ் மேக்கர் சிகிச்சைக்கு பிந்தைய நோய்த் தொற்றின் அறிகுறிகளுடன் காணப்பட்டார். அப்போலோ மருத்துவமனை மருத்துவக் குழுவினரின் இந்த புதிய தனித்துவமான சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டது தெரியவந்தது

இதய துடிப்பில் கோளாறுகள் உள்ள நோயாளிகளிடையே உயிர் வாழ்தலின் மேம்பாடும் தரத்தின் அதிகரித்துள்ள வேளையில், பேஸ்மேக்கர் போன்ற இதயத்தில் பொருத்தக் கூடிய மின்னணு சாதனங்கள் பொருத்திக் கொள்ளுதலும் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், இத்தகைய இதயத்தில் பொருத்தக் கூடிய மின்னணு சாதனங்களின் பரவலான பயன்பாட்டுடன், சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்களான, சாதனங்களினால் ஏற்படும் நோய்த் தொற்று, ஈய முனைகளின் செயலிழப்பு (lead dysfunction) போன்றவற்றின் பாதிப்புகளும் இத்துடன் சேர்ந்து அதிகரித்துள்ளது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர், ப்ரீத்தா ரெட்டி (Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Group) கூறுகையில், “சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் அதிநவீன தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் அப்போலோ மருத்துவமனை ஒரு முன்னோடியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இருதயம் தொடர்பான நோய்கள் மக்கள் தொகையின் பெரும்பாலானோரை பாதித்து வருகின்றன நாம் அதிநவீனமாக இருப்பதற்கும், மக்களின் வளர்ந்து வரும் கவலைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மருத்துவக் குழுக்கள் சமீபத்திய தொழில் நுட்பங்களின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. மேலும், அந்த மருத்துவ முன்னேற்றங்களை உடனுக்குடன் சிகிச்சைகளில் இணைத்துக் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

பேஸ் மேக்கர் பொருத்திய சிகிச்சைக்கு பிந்தைய சில குறிப்பிட்ட கோளாறுகளை கொண்டவர்களுக்காக இந்த அதிநவீன லேசர் தொழில் நுட்பத்துடன் கூடிய முறையை இணைத்துக் கொண்டுள்ளோம் என்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், இது போன்ற நடைமுறைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், எங்கள் நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரத்தை வழங்குவதற்கும் தேவையான திறமையும் நிபுணத்துவமும் பெற்றுள்ளனர்” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட் மருத்துவர் ஏ.எம். கார்த்திகேசன் (Dr. A M Karthigesan, Interventional Cardiologist and Electrophysiologist, Apollo Hospitals) கூறுகையில், “எங்கள் நோயாளிகளில் ஒருவருக்கு அதிநவீன லேசர் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதயத் துடிப்பு கோளாறுகள் உள்ள நோயாளிகளில் பேஸ் மேக்கர் போன்ற மின்னணு சாதனங்களை பொருத்திக் கொண்டவர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை மிக மிக முக்கியமானது. மேலும் இவர்களுக்கு லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில், பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட பிறகு, உடல் நலம் தேறி வரும் சூழலில், பைபர் முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுதல்கள் அல்லது சிகிச்சைக்குப் பிந்தைய வடுக்கள் (fibrotic adhesions / scars) காரணமாக உள்ளே பொருத்தப்பட்ட சாதனங்களின் ஈய கம்பியின் முனைகள் இதயத் திசுக்களில் ஒட்டிக் கொள்கின்றன.

இவற்றை பிரித்தெடுப்பது மிகவும் கடினமான செயலாகும் பாதிக்கப்பட்ட கம்பிகளை அகற்றத் தவறினால், தீவிரமான நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு வகையான உயிருக்கு கூடிய சிக்கல்களை ஆபத்தை ஏற்படுத்தக் உருவாக்கிட இது வழிவகுக்கும் பாதிக்கப்பட்ட கம்பிகளை அகற்ற மருத்துவர்கள் சில வேளைகளில் திறந்த இருதய அறுவை சிகிச்சை முறையை நாடலாம். இருந்த போதிலும், மற்ற பிரித்தெடுக்கும் சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும் போது, எக்ஸைமர் லேசர் சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் ஆற்றல் வாய்ந்த ஒன்றுமாகும்” என்றார்.

எக்ஸைமர் தொழில்நுட்ப சிகிச்சை என்பது 308 நானோ மீட்டர்கள் கொண்ட ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் புற ஊதா கதிர்களின் குளிர்ந்த கற்றையை வெளியிடுவதன் மூலம், கட்டியை உடைத்து, ஆவியாக்கி, ஒட்டியிருக்கும் முனைகளை துல்லியமாக அகற்றி விடும் செயல் முறையாகும். செயல்முறையின் இந்த பகுதி “துடிப்புள்ள ஒளியால் அகற்றுதல்” (pulsed photo ablation) என்று அழைக்கப்படுகிறது.

மேலும் கூடுதலாக, லேசர் ஒளிக் கற்றையின் ஊடுருவல் 50 மைக்ரான்கள் ஆழம் வரை மட்டுமே செல்வதால் இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும், உயிரை பாதுகாக்கக் கூடியதாகவும் அமைகிறது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் பற்றி..

1983-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் முதலாவது மருத்துவமனை தொடங்கப்பட்டபோது சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போலோ, தற்போது, உலகின் மாபெரும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு தளமாக விளங்கும் அப்போலோ 12,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 72 மருத்துவமனைகள், 5000 மருந்தகங்கள், 400-க்கும் மேற்பட்ட ப்ரைமரி கேர் கிளினிக்குகள் மற்றும் 1228-க்கும் அதிகமான நோயறியும் மையங்கள், 700-க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களைக் கொண்டுள்ளது.

15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை [commemorative stamp] வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்குவதிலும், மருத்துவ கண்டுப்பிடிப்புகளை கண்டறிவதிலும் க்ளினிக் சேவைகளை அளிப்பதிலும், நவீன பயன்படுத்துவதிலும் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து தனது தலைமைத்துவ இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.

For more information please contact: APOLLO HOSPITALS I Suganthy 9841714433 ADFACTORS PR| Timothy J 99626 29240 | Anjana Raghu Ram 9677220106