October 30, 2024
  • October 30, 2024
Breaking News
May 25, 2018

கர்நாடகா – நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி

By 0 1065 Views

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

மந்திரி சபையில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் உள்ளிட்டு மந்திரிகள் பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானித்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு நடந்தது. அவையில் இருந்த 117 எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம், ஆதரவளித்ததை தொடர்ந்து குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.

முன்னதாக தனது அரசின் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களை சட்டசபையில் குமாரசாமி விளக்கினார். அப்போது, “காங்கிரஸ் – மஜத கூட்டணி ஐந்து ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். எங்கள் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை, நாங்கள் மக்களுக்காக உழைப்போம்..!” என்றார்.