December 13, 2025
  • December 13, 2025
Breaking News
March 19, 2019

உலகமயமாக்கலை உள்ளடக்கி ஒரு தமிழ்ப்படம்

By 0 932 Views
 உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற  படம் உருவாகிறது.
 
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.
 
 ‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின்  பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
 
பழநீஸ். Ks. ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார்.
 
 உலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும்  சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்கிறது படம்.  
 
 ‘குச்சி ஐஸ்’ படத்தின் தொடக்க விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாத வாக்கில் படம் வெளியாகவுள்ளது.