கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஆகிறது.
இந்நிலையில் மாநில அரசுகள் அவரவர்களின் சூழ்நிலைக்கேறப சில தொழில்களுக்கு ஊரடங்கி லிருந்து விலக்கு அளித்து அந்தந்த தொழில்களை தொடர உத்தரவிட்டார்கள்.
அதன் அடிப்படையில் முடங்கிக் கிடக்கும் சினிமா தொழிலின் முக்கிய அம்சமான போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளைத் தொடர தயாரிப்பாளர்களின் சார்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் விளைவாக இன்று மே பதினொன்றாம் தேதி முதல் டப்பிங், எடிட்டிங், மிக்ஸிங், சிஜி முதலான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடரலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் அதற்கு பல நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையின் முன்னணி post-production ஸ்டூடியோ வான ‘நாக்ஸ் ஸ்டுடியோ’விலும் இன்று post-production பணிகளை தொடர்வதற்கான சாத்தியங்களை அதன் மேலாளர் திரு. கல்யாணம் பார்வையிட்டார்.
கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் வந்துபோகும் இடமாக ‘ நாக்ஸ் ஸ்டூடியோ ‘ இருப்பதால் அவர்களை கவனத்துடன் நோய் தொற்று ஏற்படாமல் அனுப்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
இதைப்பற்றி ‘நாக்ஸ் ஸ்டூடியோ’ மேலாளர் திரு. கல்யாணம் கூறும்போது, ” தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் வந்து போகும் இடமாக எங்கள் ஸ்டூடியோ இருப்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முதல் கடமை ஆகிறது.
அதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்யும் பணியில் இருக்கிறேன். வருபவர்களை பாதுகாப்பாக வரவேற்று மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும். இந்த உறுதியை என்னால் தரமுடியும்..! ” என்றார்.
மேலும் அவர் தங்கள் ஸ்டூடியோவின் ஆய்வு பற்றி பேசிய வீடியோ…