March 10, 2025
  • March 10, 2025
Breaking News
March 9, 2025

கிங்ஸ்டன் திரைப்பட விமர்சனம்

By 0 19 Views

ஆவிகள், அமானுஷ்யம் என்றாலே ஒரு கட்டடத்தை பிடித்துக் கொண்டு அங்கு வருபவர்களை அவை ஆட்டிப்படைக்கும் என்று பார்த்து பார்த்து போரடித்த மக்களுக்கு புதிதாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் மற்றும் நாயகனுமான ஜிவி பிரகாஷும், இயக்குனர் கமல் பிரகாஷும்.

ஆமாம் இந்த படத்தில் கட்டிடப் பருப்பை விட்டு விட்டு கடல் பரப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு துஷ்ட சக்தி. அதனால் தூத்துக்குடியில் அந்த ஆன்மாவை சேர்ந்த எந்த மக்களும் கடலுக்கு மீன் பிடிக்க போவதில்லை போனால் திரும்ப பிணமாக தான் வருவார்கள். 

இதனால் அந்தப் பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று அரசாங்கம தடை விதித்து விடுகிறது. (ஏன் பிணமாகிறார்கள் என்று அறிவார்த்தமாக கண்டுபிடிக்க அரசாங்கத்தில் ஆளே இல்லையா..?)

எனவே வருட காலக்க யாரும் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் ஏதேதோ வேலையை செய்து கொண்டு கூடவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை திருட்டுத்தனமாக பிடித்து அதையும் கள்ளக்கடத்தலாக விற்று வருகிறார்கள்.

இதில் ஒருவர் நாயகனாக வரும் ஜிவி பிரகாஷ். ஒரு கட்டத்தில் கள்ளக் கடத்தலின் போது வசமாக சிக்கிருக்க வேண்டியவர் அதிலிருந்து தப்புகிறார் அதிலிருந்து இனி தப்பு செய்வதில்லை என்று முடிவெடுக்கிறார். 

எனவே வருடம் கணக்காக எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பது போல் கடலுக்குள் எந்த அமானுஷ்யமும் இல்லை என்று நம்ப வைக்க மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்பவர் என்ன ஆனார் என்பதுதான் கதை.

இதுவரை தனக்கு பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து வந்த ஜிவி பிரகாஷ் தானே தயாரிப்பாளராக போது ஏன் தனக்கு பொருந்தாத கதையை தேடிப் பிடித்தார் என்று தெரியவில்லை. 

மீனவ குப்பத்தில் இருக்கும் ஒரு அடாவடி பேர்வழி அவர் என்பதை நம்புவதற்கு இல்லை. அதுவும் அந்த ஏரியா தாதாவே அவரிடம் கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்ளும் அளவுக்கு இவரும் குட்டி தாதாவாக இருப்பதும் நம்பகமாக இல்லை. அதுவும் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படம் அவருக்குக் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை.

நாயகி திவ்ய பாரதிக்கு பெரிய வேலை என்றில்லை, சிறிய வேலை கூட இல்லவே இல்லை. இரண்டாவது பாதி படம் முழுவதும் கடலில் தான் ஏறும்போது அவரையும் ஜீவி பிரகாஷ் உடன் படையில் ஏற்றி அனுப்பி விடுகிறார் டைரக்டர்.

உயிரோடு இருக்கும் போது யார் நல்ல ஆன்மா யார் கெட்ட ஆன்மா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவர்கள் இறந்து ஆவிகளாக சுற்றும்போது அதைக் கண்டுபிடிக்க முடிவது ஆச்சரியம் தான்.

அப்படி அழகம்பெரும்பாலும் சேத்தனும் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் முகம் மாறித் தெரிகிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் சாபு மோனை சரியாக பயன்படுத்தவில்லை. அத்தனை பெரிய வில்லனை ஜிவி பிரகாஷ் அண்ட் கோ சர்வ சாதாரணமாக கட்டி கடலில் தூக்கி கொண்டு போவதெல்லாம் சாத்தியமே இல்லை. 

ஜிவி பிரகாஷின் தாத்தா குமரவேல் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அவரும் ஒரு கட்டத்தில் செத்துப் போகிறார்.

இவர்களுடன் அப்துல் சாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் ஒரு லிட்டர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் கோகுல் வினோ எண் ஒளிப்பதிவும், கலரிங்கும்தான். அவருடன் சிஜி கலைஞர்களும் இணைந்து ஒரு ஆங்கில படம் பார்க்கும் அனுபவத்தை விஷுவலாக தந்திருக்கிறார்கள்.

நம்பகமான கதையும் திரைக்கதையும் மட்டும் ஒத்துப் போயிருந்தால் உண்மையிலேயே பாராட்ட தகுந்த படைப்பாக அமைந்திருக்கும்.

எல்லோரும் படங்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்து வடும் ஜி.வி.பிரகாஷ் குமார், தனக்கு மட்டும் ஏன் சரியாக பாடல்களை இசைவதில்லை என்பது புரியவில்லை.

படத் தொகுப்பும் உரையாடல்களும் நமக்கு கதையை புரிய வைப்பதற்கு பதிலாக நிறையவே குழப்புகிறது. தேவையற்ற ஒலிகளால் வசனங்கள் புரியவே இல்லை.

இவ்வளவு செலவு செய்ய ஜிவி பிரகாஷ் போன்ற தயாரிப்பாளர் கிடைக்கும் திரைக்கதையில் எந்த சுவாரசியத்தையும் தர முடியாததால் இயக்குநர் கமல் பிரகாஷ் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியவில்லை. அல்லது அவரது முதல் முயற்சியாக இது இருப்பதால் அவருக்கு எந்த விதமான நெருக்கடிகள் வந்தன என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

ஆவிகள் எல்லாம் பேய்களாக ஜடப்பொருளாகவே வந்து மனிதர்களுடன் சண்டையிடுவதெல்லாம் அநியாயத்துக்கு காதில் பூசுற்றல்.

மனிதன் செத்துப் போனால் பேயாகிறான் பேய் செத்துப் போனால் என்னவாகும்..?

என்கிற கேள்வியுடன் படத்தை விட்டு வெளியே வர வேண்டி இருக்கிறது. 

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பதை போல் தயாரிப்பாளராக இருப்பது அத்தனை சுலபமான வேலை இலலை என்பதை ஜிவி பிரகாஷ் இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

கிங்ஸ்டன் – கிங் சைஸ் உருட்டல்..!