இந்தியாவிலேயே இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகத்தில் 100% விழிப்புணர்வுடனும், 70% பேர் உடனடியாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கவும் தயாராக உள்ளனர்.
IMRB Kantar உடன் இணைந்து இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி (IAC-Life) நடத்திய ஆய்வில் மேலும் பல முக்கிய நுண்ணறிவுகள் கண்டறியப்பட்டுள்ளன..!
• பதிலளித்தவர்களிடையே ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு 100% பேருக்கும் இருந்தது
• ஏற்கனவே பாலிசி வைத்திருக்காதவர்களில் 70% பேர் அடுத்த 3–6 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்
• 63% பேர் சேமிப்புடன் இணைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள்.
• 34% பேர் தற்போது சேமிப்பு அடிப்படையிலான லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வைத்துள்ளனர்
• இன்ஷூரன்ஸ் வாங்கும் திட்டமுள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இன்ஷூரன்ஸ் வைத்திருப்பவர்கள் மத்தியில் காப்பீட்டுத் திட்டத்தை வாங்க ஊக்கமளிக்கும் முக்கிய காரணிகளாக இருப்பவை: குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு (63%) மற்றும் குழந்தையின் எதிர்காலம் (48%).
சென்னை, ஆகஸ்ட் 22, 2025 — சந்தை ஆராய்ச்சி தளமான Kantar (கந்தர்)-உடன் இணைந்து இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி (IAC-Life) நடத்திய சமீபத்திய ஆய்வில் – ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடையே கொண்டுச் செல்வதில் குறிப்பட்ட பிராந்தியங்களின் அடிப்படையிலான நுண்ணறிவுகள் எந்தளவிற்கு முக்கியம் என்பதை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் நிதிசார் தயார்நிலை மற்றும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு எந்த நிலையில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள போதுமான தரவை வழங்கியுள்ளது.
காப்பீடு குறித்த விழிப்புணர்வுள்ள, மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள சமூகங்களில் ஒன்றாக தமிழகத்தை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டில் ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) குறித்த 100% விழிப்புணர்வும், இதுவரை பாலிசி எதுவும் வாங்காதவர்களிடையே 70% பேர் இன்ஷூரன்ஸ் வாங்கும் நோக்கத்தை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது நாட்டின் சராசரியான 55%-ஐ விட அதிகமாகும்; மேலும் உத்தரபிரதேசம் (58%), மேற்கு வங்கம் (53%) மற்றும் ஆந்திரா & தெலுங்கானா (26%) போன்ற பிற மாநிலங்களை விட இது அதிகமாகும். தமிழ்நாட்டின் இந்த மேலான நிலையானது – இம்மாநில மக்களின் நிதி திட்டமிடல் மற்றும் நிதிசார் விவேகத்துடன் கூடிய மனப்பான்மையைப் பிரதிபலிக்கின்றது. பதிலளித்தவர்களில் 88% பேர் எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடவும், அதற்காக தயாராக இருக்கவும் விரும்புவதாகக் கூறினர்.
“ஆயுள் காப்பீட்டை பொருத்தவரை விழிப்புணர்வுக்கு அப்பால் செயல்பாட்டிற்கு மாறுவதற்கான தயார்நிலையில் இருப்பதை தமிழ்நாடு தெளிவாக வெளிப்படுத்துகிறது,” என்று இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியின் (IAC-Life) இணைத்-தலைவர், திரு. வெங்கடாசலம் ஐயர் அவர்கள் தெரிவித்தார். “இதன் காரணமாக நாங்கள் நடத்திவரும் ‘சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ்’ என்கிற பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு பிரதான முன்னுரிமை வழங்கவுள்ளோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்..
இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியால் (IAC-Life) சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ்’ பிரச்சாரத்தின் புதிய பதிப்பினை தமிழ்நாட்டில் மேலும் தீவிரமாக முன்வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதனையடுத்து பின்வரும் சில முக்கிய நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வகையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் துரிதப்படுத்தப்படும்:
• பதிலளித்தவர்களிடையே ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு 100% சதவீதம் உள்ளது – கணக்கெடுக்கப்பட்ட பிற பகுதிகளை விட இதுவே மிக அதிகமாகும்.
• தற்போது பாலிசி வைத்திராத நபர்களில் 70% பேர் அடுத்த 3-6 மாதங்களுக்குள் (இது தேசிய அளவில் 55%) ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்; இது நிதிசார் திட்டமிடலின் அவசியத்தை தமிழக மக்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
• 63% பேர் சேமிப்புடன் இணைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் – மொத்தமாக அல்லது மாத வருமானத்தை வழங்குவதை அறிந்திருக்கிறார்கள்; இதுவும் அவர்களிடையே நல்ல விழிப்புணர்வு இருப்பதைக் குறிக்கிறது.
• 34% பேர் தற்போது சேமிப்பு அடிப்படையிலான லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வைத்திருக்கிறார்கள்; இது டெர்ம் பாலிசிகள் தவிர மற்ற இன்ஷூரன்ஸ் தயாரிப்புகளை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது.
• இன்ஷூரன்ஸ் வாங்கும் திட்டமுள்ளவர்கள் மத்தியில் குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு (63%) ஒரு முக்கிய காரணமாகவும், மற்றும் ஏற்கனவே இன்ஷூரன்ஸ் வைத்திருப்பவர்கள் மத்தியில் குழந்தையின் எதிர்காலம் (48%) போன்றவை காப்பீடு வாங்க முக்கிய உக்குவிக்கும் காரணிகளாக உள்ளன.
தமிழ்நாட்டில் பதிலளித்தவர்களில் 68% பேர் சேமிப்புடன் இணைக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ஆர்வம் காட்டிய போதிலும், தற்போது 34% பேர் மட்டுமே இது போன்ற ஒரு பாலிசியை வைத்துள்ளனர்; இது 34 சதவீத இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது; அதாவது காப்பீட்டுத் தயாரிப்பில் உள்ள சிக்கல், அதற்காக கருதப்படும் செலவு மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் பொருந்தும் தன்மை ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் – எளிமையான, பொருத்தமாக எடுத்துக்கூறும் தகவல்தொடர்புகளின் அவசியத்தையும் இந்த இடைவெளி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பிராந்திய அளவிலான விழிப்புணர்வு முன்முயற்சிகள், பிரபலங்கள் மூலம் தகவல் தெரிவித்தல், பிராந்திய மொழியில் உரையாடல்கள் மற்றும் கட்டுக்கதைகளை அகற்றும் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம், தமிழ்நாட்டில் – காப்பீட்டுப் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரட்டை இலக்கு கொண்ட தயாரிப்பாக லைஃப் இன்ஷூரன்ஸை நுகர்வோர் மத்தியில் கொண்டு செல்லவும், அவர்கள் புரிந்துகொள்ள உதவுவதுமே இந்த கமிட்டியின் நோக்கமாகும்.
இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியின் (IAC-Life) ‘சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ்’ என்கிற காப்பீட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தின், புதிய 2.0 பதிப்பின் சமீபத்தில் துவங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது டெர்ம் மற்றும் சேவிங்ஸ் காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் வகைகளைப் பற்றிய விழிப்புணர்வை நன்கு ஏற்படுத்துவும், நிஜ வாழ்க்கை உதாரணங்களைக் காண்பிக்கவும் உள்ளது; அதன் மூலம் ஆயுள் காப்பீடு குறித்து புரிந்து கொள்வதையும், அதனை அணுகுவதையும் எளிதாக்கவுள்ளது. இந்நடவடிக்கைகளின் நோக்கம் ஆயுள் காப்பீட்டின் மீதான தமிழக மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதே ஆகும். ‘சப்சே பெஹ்லே லைஃப் இன்ஷூரன்ஸ் 2.0’ என்கிற இந்த பிரச்சாரத்தின் கீழ் IAC கமிட்டி தொடர்ச்சியான முன்முயற்சிகளை மேற்கொண்டு – இந்தியாவை விழிப்புணர்வு பெறுவதைக் கடந்து காப்பீட்டைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு கொண்டு செல்வதே அதன் நோக்கமாகும். அதாவது லைஃப் இன்ஸூரன்ஸ் என்பது ஒரு பரிச்சயமான விருப்பமாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்திய வீட்டிலும் அத்தியாவசியமான நிதிசார் இருப்பாகவும் மாறுவதை உறுதி செய்கிறது.
இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி பற்றிய விவரங்கள்:
இந்தியாவில் 87% பேர் குறிப்பிடத்தக்க ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பின்றி தொடர்ந்து போராடி வருகின்றனர்; இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது, குறிப்பாக 18-35 வயதுடையவர்களிடையே 90% சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த அதிகரித்து வரும் மோசமான நிலை குடும்பங்களின் நிதிசார் பாதுகாப்பு மற்றும் இலட்சியங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
நமது நாட்டின் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை பராமரிக்க போர்க்கால அடிப்படையில் இந்த சவாலை எதிர்கொள்வது மிகவும் முக்கியமாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சிலின் வழிகாட்டுதலின் பேரில் இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி அமைக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் திட்ட முன்மொழிவை வழிநடத்த, பரிந்துரைக்கப்பட்ட ஆறு தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) வழிகாட்டுதலின் கீழ் பங்களிப்பை வழங்க ஒருங்கிணைக்கப்பட்டன. கிரியேட்டிவ் / ஊடக ஏஜென்சிகளின் ஆதரவுடன் பல்வேறு தொழில்துறைகளின் கூட்டு மார்கெட்டிங் குழுவும் இதில் உள்ளன. இந்த இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டியானது லைஃப் இன்ஷூரன்ஸ் தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வு, புரிதல் மற்றும் கருத்தை ஊக்குவிக்க – நாடு தழுவிய பிரச்சாரங்களை நடத்திட போதிய ஆராய்ச்சி, திட்டமிடல், உருவாக்கம் மற்றும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது.
For further queries, please contact: Concept PR – Chennai
Mahadevan – mahadevan@conceptpr.com – +91 9957352037
Sam Sundar S J – sam@conceptpr.com – +91 8778108541