கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது. நமது பிரதமரைப் பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? 100 கோடி மக்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை, நீங்கள் மட்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள் ? நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அரசியல் கருத்துக்கள் உள்ளன, இருந்தாலும் அவர்தான் இன்னும் நமது பிரதமர்.
நீங்கள் புது தில்லியின் ஜவஹர்லால் நேரு தலைமைத்துவ நிறுவனத்தில் பணிபுரிவதாகத் தெரிகிறது, முன்னாள் பிரதமரான நேருவின் பெயரை நீக்குமாறு பல்கலைக்கழகத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, உலகின் பல நாடுகளில் வழங்கப்பட்ட சான்றிதழை நான் சரிபார்த்தேன். ஒருவரிடம் கூட அவர்களின் பிரதமரின் படம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, அவர்கள் தங்கள் நாட்டின் பிரதமரைப் பற்றி பெருமிதம் கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் நமது பிரதமரை நினைத்து பெருமை கொள்கிறோம். ஏனென்றால், மக்கள் தேர்வின் மூலம் அவர் பிரதமரானார். இந்த வழக்கை தொடுத்ததன் மூலம் நீதிமன்ற நேரத்தை நீங்கள் வீணடித்து விட்டீர்கள் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்