கர்நாடகாவில் வரும் 23-ந்தேதி புதனன்று மாநில முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளது தெரிந்த விஷயம். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேச, அவரை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னரும் அழைப்பு விடுத்தார்.
அந்த விழா மே 23-ம் தேதியன்று நடக்க இருக்கும் நிலையில் கூட்டணி மற்றும் ஒத்த கருத்துடைய தலைவர்கள் அழைக்கப்பட்டு வரும் வகையில் முன்னாள் பிரதமரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலும் கர்நாடகா சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார் என்று தெரிகிறது. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்லும் மற்ற தலைவர்கள் பற்றி இனிதான் தெரிய வரும். #