ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வடபழனி – காவேரி மருத்துவமனை 365 நாட்களும் அர்ப்பணிப்புடன் இயங்கும் “ஃபேமிலி கிளினிக்” –ஐ தொடங்குகிறது
சென்னை: 12 ஜூலை 2024: சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை அதன் ஓராண்டு ஆண்டுவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. சேவையில் கிடைக்கும் மகிழ்ச்சியை சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் குடும்பங்களுக்கு மிதமான கட்டணங்களில் முழுமையான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் “ஃபேமிலி கிளினிக்” என்பதனை காவேரி மருத்துவமனை இந்த ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தொடங்கியிருக்கிறது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது பிரிவினருக்கும் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவையை வழங்க வேண்டுமென்ற இம்மருத்துவமனையின் பொறுப்புறுதிக்கு இந்நிகழ்வு நேர்த்தியான சான்றாக இருக்கிறது.
வழங்கும். தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஃபேமிலி கிளினிக், சமுதாயத்திற்கு எண்ணற்ற பலன்களை சிறார்கள் முதல், முதியவர்கள் வரை அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் விரிவான சிகிச்சைகளை இது அளிக்கிறது. குறித்த காலஅளவுகளில் உடல்நலப் பரிசோதனைகள், தடுப்பூசி மருந்துகள் மற்றும் நோயறிதலுக்கான ஸ்க்ரீனிங் சோதனைகள் போன்ற முன்தடுப்பு சுகாதார சேவைகள், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு நிலைகளை கண்டறிவதற்கும் முதன்மையான வழிமுறைகளாக இங்கு இருக்கும்.
மேலும் நீரிழிவு, மிகை இரத்தஅழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட, தீவிர நிலைகளுக்கு நிபுணத்துவ மேலாண்மை சேவையையும் தந்து உகந்த உடல்நல விளைவுகள் கிடைக்கப்பெறுவதை ஊக்குவிக்கும்.
காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும் இந்த ஃபேமிலி கிளினிக், ரூ.200 என்ற மிகக்குறைவான கட்டணத்தில் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனையை வழங்கும். டாக்டர். சுஜாதா, கிளினிக்கல் லீட் – குடும்ப மருத்துவம், டாக்டர். வைபவ் சுரேஷ், இணை மருத்துவர் – குடும்ப மருத்துவம் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய எமது குழு, குடும்பத்திலுள்ள அனைத்து வயது பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சையையும், பராமரிப்பையும் வழங்கும்.
குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அவரவருக்குத் தேவைப்படுகின்ற கவனிப்பையும், சிகிச்சையையும் பெறுவதை உறுதி செய்வது மீது அனுபவம் மிக்க இம்மருத்துவ நிபுணர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர். தேவைப்படுமானால், குடும்ப மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்போது, கூடுதல் கட்டணங்களின்றி சிறப்பு நிபுணர் / சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் நிபுணரை சந்தித்து, மருத்துவ ஆலோசனையை பெறமுடியும்.
இந்த குடும்ப மருத்துவமனையில் சௌகரியமான சிகிச்சைக்கு அணுகுவசதியை உறுதிசெய்வது ஒரு முக்கிய முன்னுரிமையாக இருக்கிறது. காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தொடர்ச்சியாக இந்த கிளினிக் இயங்குவதால், பணியாற்றுபவர்கள், மாணவர்கள் உட்பட, தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த மருத்துவ சேவைகளைப் பெற முடியும். அதற்கும் மேலாக, வெறுமனே ரூ.200 என்ற எளிய கட்டணத்தில் மருத்துவ நிபுணர்களின் சிறந்த ஆலோசனையையும், சிகிச்சையையும் இதில் பெற முடியும் என்பதால், அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை இதில் சாத்தியமாகும்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “அனைத்து மக்களும் அதிகம் மதிக்கின்ற மற்றும் பெரிதும் நம்புகின்ற சுகாதார சேவை வழங்குனராக உருவெடுக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள். இம்மருத்துவமனை தொடங்கி ஓராண்டு நிறைவடையும் இத்தருணத்தில், குடும்ப கிளினிக்கை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் சமுதாயத்திற்கான எமது சேவை அர்ப்பணிப்பை மீண்டும் நாங்கள் உறுதி செய்கிறோம்; ஏழை எளிய மக்களும் உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கான வாய்ப்பை நிஜமாக்க வேண்டுமென்ற எமது செயல்திட்டத்திற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு. வடபழனி பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் அனைத்திற்கும் விரிவான மற்றும் சிறப்பான மருத்துவ சேவைகளை எளிய கட்டணத்தில் வழங்குவது என்ற எமது பொறுப்புறுதிக்கு இந்த கிளினிக் சான்றாக திகழ்கிறது.” என்று கூறினார்.
நேர்த்தியான மருத்துவ சிகிச்சைக்கும் மற்றும் நோயாளிகளுக்கு கனிவான பராமரிப்பை வழங்குவதற்கும் உயர்தர நிலைகளை நிறுவியிருப்பதால், மக்களின் அதிக நம்பிக்கைக்குரிய மருத்துவ மையமாக வடபழனி காவேரி மருத்துவனை புகழ் பெற்றிருக்கிறது. நோயாளிகளின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கான காவேரி குழுமத்தின் பயணத்தில் இந்த ஃபேமிலி கிளினிக்கின் தொடக்கம் மற்றுமொரு முன்னேற்ற நடவடிக்கையாகும்.
நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் ஆரம்ப நிலைகளிலேயே நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதும் முன்தடுப்பு சுகாதார சேவைகளின் மைய அம்சங்கள் என்று நம்புகின்ற காவேரி மருத்துவமனை, அதற்கு முன்னுரிமை அளிக்கும். முன்தடுப்பு பராமரிப்பின் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் நாட்பட்ட நோய்கள் வரும் வாய்ப்புகளை குறைக்கவும் மற்றும் சமுதாய உறுப்பினர்களின் நீண்டகால உடல்நலத்தை மேம்படுத்தவும் இயலும் என்று இம்மருத்துவமனை நம்புகிறது.
Left to Right : Dr Kavitha S, Senior Family Physician, Kauvery Hospital , Dr Aravindan Selvaraj, Co Founder and Executive Director , Kauvery Group of Hospitals , Chief Guest Dr Kalanithi Veeraswamy, Member of Parliament – North Chennai, Dr Poorna Chandran, Medical Administrator Kauvery Hospital Vadapalani , Dr Sujatha , Clinical Lead – Family Physician, Kauvery Hospital Vadapalani