September 16, 2025
  • September 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அரசியல்வாதிகள் திறந்த டாஸ்மாக்கை நாம் மூடுவோம் – பேரரசு
September 14, 2019

அரசியல்வாதிகள் திறந்த டாஸ்மாக்கை நாம் மூடுவோம் – பேரரசு

By 0 782 Views

பிரவீன் இயக்கியிருக்கும் ‘காதல் அம்பு’ படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை விக்னேஷ் நாகேந்திரன் ஏற்க, சன்னி டான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, ஜக்குவார் தங்கம், ஜூனியர் பாலையா, இயக்குநர் பேரரசு கலந்து கொண்டனர்.

அதில் பேரரசு பேசியது ஹைலைட். அவர் பேசியதிலிருந்து…

“இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் “கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறேன்… தமிழில் இதுதான் முதல் படம்..!” என்றார். பிறமொழி திரைப்படங்களிலும் பணியாற்றுங்கள், பிறமொழிகளில் வெற்றிப்பெற்றால் வியாபார வெற்றி தான். தாய்மொழியில் வெற்றியடைவது தான் ஆத்ம திருப்தி தரும்.

இயக்குநர் பிரவீன் வெளிப்படையாக பேசினார். ஆள் பார்க்க சிறிய பையனாக இருந்தாலும், சினிமா அறிவு நிறைய இருக்கிறது. ‘இன்று போய் நாளை வா’, ‘காதலிக்க நேரமில்லை’ என்று காதலை நகைச்சுவையாகக் கூறிய படங்கள் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல், இப்படமும் வெற்றியடையும்.

எந்த காரணமாக இருந்தாலும் மது அருந்துவதுதான் இப்போதுள்ள கலாச்சாரம் என்று எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது. ஆகையால், இதுபோன்ற காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு அதிகம். அரசியல்வாதிகள் டாஸ்மாக் கடையைத் திறந்தால், சினிமாக்காரர்களான நாம் அதை மூட வைப்போம்..!”