April 19, 2025
  • April 19, 2025
Breaking News
March 17, 2021

மகனுக்கு சுத்தத் தமிழ்ப் பெயர் வைத்த கார்த்தி

By 0 587 Views

சிவகுமாரின் மகன்களான சூர்யா கார்த்தி இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களில் சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் குழந்தைகளுக்கு தியா, தேவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறக்க அதற்கு சுத்த தமிழில் உமையாள் என்று பெயர் வைத்தனர்.

அதற்கு பின் நான்கு மாதங்களுக்கு முன் ரஞ்சனி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று நான்கு மாதங்களாக பெயர் வேட்டையில் இறங்கினார் நடிகர் கார்த்தி.

கடைசியில் இப்போது கந்தன் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து தன் சமூக பழக்கமான ட்விட்டரில் தன் மகனுக்கு கந்தன் என்று பெயரிட்டு இருப்பதை அவனுக்கு ஒரு செய்தியாக ட்வீட் செய்திரக்கிறார் கார்த்தி.

அவரது அப்பா சிவகுமாருக்குப் பெயர் வாங்கித் தந்த கந்தன் கருணை படத்திலிருந்து கந்தனை வைத்திருப்பதாக வே கருதப்படுகிறது.

எப்படி இருப்பினும் தன் குழந்தைகளுக்கு சுத்த தமிழில் பெயர் வைத்திருக்கும் கார்த்தியை மனதார பாராட்டுவோம்.