கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி என்று அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைய உள்ளது.
முன்னதக இந்தத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு பாராளுமன்றம் அமையவே சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றியை உறுதிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படி கர்நாடகாவில் 20 இடங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சூறாவளி பிரசாரச் சுற்றுப்பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் பிரசாரம் மே முதல் தேதியில் இருந்து தொடங்க சாத்தியம் இருப்பதாகத் தெரிகிறது.