19-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் செய்தார்.
அதில் அவர் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு இந்துதான்..!” என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் மனு அளித்துள்ளார்.
அதில் ‘அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்தது 5 நாட்களுக்கு தடை செய்ய வேண்டும், கமல் மீது வழக்கு பதிவு செய்யவும், மேலும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி’யும் அவர் அளித்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.