July 6, 2025
  • July 6, 2025
Breaking News
April 3, 2020

வீடுகளில் விளக்கேற்ற சொன்ன பிரதமர் பேச்சை நையாண்டி செய்த கமல்

By 0 778 Views

கொரோனா நடவடிக்கைகளுக்காக மூன்றாவது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி.

அப்போது அவர் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒளிஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமீப காலமாக பிரதமர் பேச்சுகளை அதிகமாக விமர்சிக்கும கமல் பிரதமரின் இந்த பேச்சு குறித்தும் நையாண்டி செய்திருக்கிறார்.

அது பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில்…

“பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்…” என்றிருக்கிறார் கமல்.

அவர் ஆதரவாளர்கள் அதனை அதிக அளவில் டீட்வீட் செய்து வருகிறார்கள்…