June 13, 2025
  • June 13, 2025
Breaking News
April 5, 2020

பிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்

By 0 713 Views

பிரதமர் மோடி லாஸ்ட் ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.

ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து இன்னிக்கு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Karu palaniappanஇவரது வேண்டுகோளுக்கு சமூகவலைதளத்தில் தமிழ் பயனர்கள் பலரும் தமிழ் படங்களில் உள்ள காட்சிகளின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களையும் பரவவிட்டு வருகிறார்கள்.

தற்போது, பிரதமரின் இந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:Mu.Kalanjiyam

”இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வெல்வோம்”

இவரைத் தொடர்ந்து நடிகை ரோகினியும், இயக்குனர மு. களஞ்சிய மும் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணிப்பதாக கூறியிருக்கிறாரகள்.

நடிகர் மன்சூர் அலிகான் அதை வழி மொழிவதாக கூறியிருக்கிறார்…