எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் தீவிரமாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் விளைவாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை பெற்ற ஶ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் வரும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் ஓட்டுகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்துள்ளது.
ஆலந்தூர் தொகுதியை பொறுத்தவரை 1967 மற்றும் 1971 தேர்தல்களில் எம்.ஜி.ஆர். களமிறங்கி வெற்றி பெற்ற காரணமாகவும் கமல்ஹாசன் அங்கு போட்டியிட இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஒருவர் பரபரப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் வேட்பாளரான கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் என்று அதில் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் ஆலந்தூர் தொகுதியிலேயே கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று கருதப்படுகிறது.