மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து…
“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க முடியும். அப்படி இரு மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காக வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்..!” என்றவர் காவிரி விவகாரம் தொடர்பான ரஜினி கருத்தை வரவேற்பதாகக் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான ௳க்க்ள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்கு செல்கிறேன். அங்கு மக்கள் பிரதிநிதியாக அவர்களுடன் போராட்டக் களத்தில் பங்கேற்க உள்ளேன்..!” என்றார்.