சென்னை, பிப்ரவரி 1, 2023: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஜேகே டயர், அதன் SUV டயர் பிரிவில், சவாலான சாலை நிலைமைகளைக் கையாளும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்ட ரேஞ்சர் HPe மற்றும் ரேஞ்சர் இரண்டு புதிய சேர்த்தல்களை இன்று வெளியிட்டது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனத்தின் தற்போதைய முயற்சிக்கேற்ப இந்த வெளியீடு அமைந்துள்ளது மற்றும் அவர்களின் தற்போதைய தயாரிப்பு இலாகாவை மேலும் வலுப்படுத்தும் உயர் மேம்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. JK டயர் & இண்டஸ்ட்ரீஸ் தலைவர் (இந்தியா) திரு. அனுஜ் கதுரியா, நிறுவன அதிகாரிகள் மற்றும் பிற விருந்தினர்கள் முன்னிலையில் இந்த தயாரிப்புகளை வெளியிட்டார்.
ஜேகே டயர் வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களில், ‘ரேஞ்சர்’ ஆனது பல நிலப்பரப்பு, உயர் செயல்திறன் கொண்ட அனைத்து சாகச ஆர்வலர்களுக்கும் ஏற்ற எஸ்யூவி டயர் வரிசையாகும். மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த புதிய டயர்கள், நவீன கால எஸ்யூவிகளின் தனித்துவமான இயந்திர பண்புகள் மற்றும் இயக்க ஆற்றல் திறனை பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.
மின்சார வாகன (EV) துறையின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, வாகனத் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், “எக்ஸ் பாலிமர்3” தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய ரேஞ்சர் HPe ஆனது, குறைந்த உருட்டுதல் எதிர்ப்பையும் அத்துடன் அதிக அளவிலான ஓட்டுநர் வசதியையும் வழங்குவதன் மூலம் EV களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக வேகத்திலும் குறைந்த சத்தத்துடன் அதிக பிடிப்பு மற்றும் கையாளுதல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை அளிக்கிறது. கூடிய இந்த ரேஞ்சர் X -AT கடுமையான ஓட்டுநர் நிலைகளிலும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. ஸ்டீயரிங் நிலைப்புத்தன்மை மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்தும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த டயர், சாலை மற்றும் சாலையல்லாத இடங்கள் ஆகிய இரண்டிலும் ஓட்டுவதற்கு, வசதி, சிறந்த இழுவை மற்றும் தேய்மான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
“உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியா முன்னேறி வருவதால், டயர் தொழில் துறையும் அதிவேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களின் தொழில்நுட்ப திறமை மற்றும் எதிர்கால தேவைகளை கணிக்கும் திறனுடன், அனைத்து பிரிவுகளிலும் எங்கள் தயாரிப்பு இலாகாவை முற்றிலும் தீவிரமாக விரிவுபடுத்துகிறோம். பயணிகள் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான உயர்தர டயர்களை உற்பத்தி செய்யும் எங்களின் உயர் தானியங்கி ரேடியல் டயர் ஆலைகளில் ஒன்றின் தாயகமாக இருப்பதால், சென்னை எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த புதிய உயர் செயல்திறன், பாதுகாப்பான மற்றும் பல்துறை தயாரிப்புகள் எங்கள் நுகர்வோரின் ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும்,” என்று ஜே.கே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் (இந்தியா) திரு. அனுஜ் கதுரியா கூறினார்.
வாடிக்கையாளர் மையப்படுத்துதலுடன் மற்றும் தயாரிப்புச் சிறப்பை முக்கியமாகக்கொண்ட, ஜே.கே டயர் நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்பு தரம் மற்றும் அனுபவத்தை வழங்குவதற்கான நிறுவனத்தின் இடைவிடாத முயற்சிகளுக்கு சான்றாகும்.
ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பற்றி…
ஜேகே அமைப்பின் முதன்மை நிறுவனமான ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உலகின் முதல் 25 உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ரேடியல் தொழில்நுட்பத்தின் முன்னோடிகளான இந்த நிறுவனம் 1977 இல் முதல் ரேடியல் டயரைத் தயாரித்தது மற்றும் இன்று டிரக் பஸ் ரேடியல் பிரிவுகளில் சந்தையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், விவசாயம், சாலைக்கு வெளியே இயங்குபவை, மற்றும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகிய பிரிவுகளில் முழுமையான தீர்வுகளை வழங்குகிறது. ஜேகே டயர் 105 நாடுகளிலும் 180க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களுடன் செயல்படும் ஒரு உலகளாவிய சக்தியாகும். இந்த நிறுவனம், ஒன்பது தளங்கள் இந்தியாவிலும் மற்றும் மூன்று மெக்சிகோவிலும், ஆக 12 உலகளவில் தரப்படுத்தப்பட்ட “நிலையான” உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது, அவை கூட்டாக, ஆண்டுக்கு சுமார் 32 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்கின்றன. இந்த நிறுவனம் 6000 க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் ஸ்டீல் வீல்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் வீல்ஸ் எனப்படும் 650 க்கும் அதிகமான பிரத்யேக பிராண்ட் கடைகளின் வலுவான நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட் டயர்களின் பயன்பாடு குறித்த விளக்க வீடியோ…
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
நேஹா திவாரி டிஜிஎம்-கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் neha.tiwary@jkmail.com அன்னபூர்ணி சீனியர் அக்கௌன்ட் மேனேஜர் அட்ஃபாக்டர்ஸ் PR annapoorni@adfactorspr.com