August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குண்டு வெடிப்பு கதையில் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்
February 21, 2019

குண்டு வெடிப்பு கதையில் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்

By 0 979 Views

‘ஜெய்’ நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான ‘பிரேக்கிங் நியூஸ்’ தொடக்கவிழா சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸ் நடைபெற்றது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார்.

மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகர், பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். 

சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், புல்வாமா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்னையைப் பற்றிய பேசும் படமாக இப்படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படம் உருவாக உள்ளது.