October 17, 2025
  • October 17, 2025
Breaking News
October 6, 2019

குடி போதையில் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து?

By 0 1332 Views

இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வேகமாக வந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அதில் தனியார் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விபத்து குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் காரை ஓட்டி வந்தவர் ஒரு பெண்மணி என்று தெரியவந்துள்ளது. அந்தக் கார் நடிகை யாஷிகா ஆனந்துடையது என்று ஒரு உறுதி செய்யாத தகவலும் வந்திருக்கிறது. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் அறிமுகமான யாஷிகா சமீபத்தில் வெளியான ‘ஜாம்பி’ படத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் பிக்பாஸ்2 நிகழ்ச்சியிலும் இடம்பெற்றவர்.

Yashika Aannad car Accident?

Yashika Aannad car Accident?

அது உண்மைதானா என்று காவல் நிலைய தகவல்தான் கூற வேண்டும். காரை ஓட்டியது நடிகையோ இல்லையோ, பெரும்பாலான அதிகாலை நேர விபத்துகள் இரவில் நெடுநேரம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகின்றன.

குடிக்காதீர்கள்… அல்லது குடித்தால் கார் ஓட்டாதீர்கள்… என்று எவ்வளவு எச்சரித்தாலும் இப்படிச் சிலர் கண்டுகொள்ளாமல் விபத்தில் சிக்குகின்றனர்.