January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்
May 4, 2018

அருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்

By 0 1459 Views

உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் த்ரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் ‘இந்தப் படத்தின் முதல் ரசிகன் படத்தின் தயாரிப்பாளர் ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு’தான். படத்தைப் பற்றி மகிழ்ச்சியோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறார் அவர்.

“முதலில் இயக்குனர் மு. மாறன் கதை சொன்னதைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாகக் கொண்டு வந்ததிலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன, அவை கண்களை இமைக்க விடாது.

மொத்தப் படத்திலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக நடந்து கொண்டார். ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டே இருந்தார். ‘மௌனகுரு’ எப்படி அவர் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ அவரை அடுத்த நிலைக்கு உயர்த்தும்.

‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ போன்ற பிரமாண்ட படங்களைத் தந்த ’24AM ஸ்டுடியோஸி’ன் ஒரு அங்கமான ’24PM ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தோடு கைகோர்த்திருப்பது பெருமையான விஷயம்..!”

சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ், இந்தப் படத்துக்கு இசையமைப்பது கூடுதல் பலம். பின்னணி இசையிலும் தன் பாணியை நிரூபித்து மிரட்டியிருக்கிறாராம் சாம்.

ரசிகர்களின் பல கோடிக் கண்களும் படத்தைப் பார்க்கத் தயாராகத்தான் இருக்கின்றன..!

Mahima-Nambiar

Mahima-Nambiar